மகளிர்மணி

 பட்டுப்புடவையைத் தவிர்த்து கதர்ப்புடவைக்கு மாறிய கோதை நாயகி

வீடு திரும்பிய கோதைநாயகி தாலி,மெட்டி தவிர தான் அணிந்திருந்த மற்ற நகைகள், வீட்டில் அணிய வைத்திருந்த நகைகள் அனைத்தையும் காந்திஜியின் ஹரிஜன நல நிதிக்கு மனமுவந்து அளித்தார்.

முக்கிமலை நஞ்சன்

ஒரு சமயம் சென்னையில் முகாமிட்டிருந்த காந்திஜியை சந்திக்க வை.மு.கோதை நாயகி தனது கணவர் பார்த்தசாரதியுடன் சென்றிருந்தார். காந்திஜியைப் பற்றி கேள்விபட்டிருந்த அவர் காந்திஜியை முதன்முதலாக பார்க்கப் போகிறோமே எனப் பட்டுபுடவை அணிந்து நிறைய நகைகள் அணிந்து சென்றார்.

கோதையைக் கண்ட காந்திஜி "" நம் நாடும் மக்களும் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருக்கின்றனர். இந்தச் சமயத்தில் ஆடம்பரமாக பட்டாடை உடுத்தி வந்திருக்கிறீர்களே?'' என்று கேட்டார்.

வீடு திரும்பிய கோதைநாயகி தாலி,மெட்டி தவிர தான் அணிந்திருந்த மற்ற நகைகள், வீட்டில் அணிய வைத்திருந்த நகைகள் அனைத்தையும் காந்திஜியின் ஹரிஜன நல நிதிக்கு மனமுவந்து அளித்தார்.

அன்று முதல் பட்டுப்புடவை அணிவதை தவிர்த்து விட்டு. கதர்ப்புடவையை அணிய தொடங்கினார். தீரர் சத்தியமூர்த்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க கதராடையை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்தார் கோதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT